Saturday, April 21, 2007

என்னுடைய முதல் வெளிநாட்டு அன்சைட் பயணம் - இந்தோனேசியா

[If your are not able to see the tamil letters. In explorer go to View -> Encoding --> Unicode(UTF-8)]
என்னடா இது அன்சைட் அப்படினாலே வெளிநாடு தானே, அப்படின்னு நீங்க நினைக்கலாம். நம்ம வேலை பார்க்கின்ற அலுவலகம் அப்படி. நம்மள இந்தியாக்குள்ளே அன்சைட் அனுப்பி சில பேரு சாதனை ப்ண்ணிட்டாங்க. சரி அது எதுக்கு இப்ப வேற ஆப்புரேசில் வருது.

ஒவ்வொரு தடவை நண்பர்களை வழி அனுப்ப போகும் போதும் நானும் ஒரு நாளு போவேன்னு ஒரு சபதம் ஒரு ஆசை. நம்ம நண்பர்களெல்லாம் வருவாங்க ஜாலியா ஒரு கால்டாக்சி பிடிச்சி நம்ம காருல போக மக்கா எல்லோரும் பைக்ல வந்து நம்ம சாபத்த போக்குவாங்கன்னு ஒரு கனவு. (அது பற்றி தனி போஸ்ட்டே போடலாம்) அதுக்கு நாளும் ஏப்ரல் 14 குறிச்சா... நானும் நம்ம மெள்லி ரெண்டு பேரும் சேர்ந்து போவதாக இருந்தது. மெள்லி முன்பே போயிருப்பதால் அவரே எல்லா ஏற்பாடு செய்து விட்டார். அந்நிய செலவாணி முதல் வந்தது 4800 + 200 டாலர். ஓரே சந்தோசம், முதல் தடவை என்னமோ கலேஜ் ல 90 பெர்சன்ட் அட்டனஷ் எடுதத மாதிரி. அடுத்து டிக்கட் வந்தது.




அஹா நம்ம உண்மையிலே போக போகிறேன்னு நினைச்சா வந்தது ஆப்பு ஃபோனில்.. இ.சி.என்.ஆர். இல்லையென்று.. மெள்லி எப்ரல் 14 இல் கிளம்பி சென்று விட்டார். நம்ம தனியாக காமடி பண்ண மறுநாள் போகிறேன். ஏப்ரல் 16 -ல் மதியம் 3 மணிக்கு தான் அன்று நைட் போவது உறுதி ஆனது... நம்ம ப்ளைட் 11.45 P.M க்கு செக்-இன் டைம் 8.30 க்கு. அதுக்கு அப்புறம் நான் லேப்-டாப், டிக்கெட்டை டைட்ல் பார்க்கில் வாங்கிட்டு, பேக்கிங் பண்ணி அப்புறம் பாஸ்போர்ட் ஏக்மோரில் வாங்கி விட்டு ஏர்போர்ட் செல்ல வேண்டும். எல்லாம் முடிந்து பாஸ்போர்ட் வாங்கும் போது மணி 7:30. நண்பனை பெட்டியை நேராக ஏர்போர்ட்டிற்கு எடுத்து வர சொல்லி விட்டு, பைக்க எடுத்தா வண்டிக்கு அப்படி ஒரு வீரம் ... சும்மா பறக்குது... 7.55 க்கு வந்தாச்சு... பொதுவாக லேன் ல ஒழுங்க கடைபிடிப்பவன் நான்.. ஆனால் அன்று ..... எப்படியோ வந்து சேர்ந்தாச்சு. நம்ம ஆன்சைட் கனவு... ம்ம்ம்ம்ம்ம்...வெளிநாடு செல்ல பைக்கில் வந்தது நான் மட்டும் தான் இருக்கும்....
சாப்பிட்டு விட்டு உள்ள போனா செக்-இன் பண்ணி ஒரு ஃபார்ம் குடுந்தாங்க... வழக்கம் போல பேனா இல்லை.. உள்ள பேனா 50 ரூபாய்(3 ரூபாய் பேனா) கொடுத்து வாங்கி.. கஸ்டம்ஸ் முடிந்து உள்ள போய் செக்குரிட்டி போன அங்க ஒரு ஆப்பு.. ஒரு லக்கேஜ் தான் அனுமதிப்பார்களாம்.. இது என்னடா சோதனை.. பேக்கில் லேப்-டாப் போகல.... லேப்-டாப்பில் பேக் போகாது... அறைகுறையா வச்சி செக்குரிட்டி முடிச்சப்புறம் தான் உயிர் வந்தது.... இருந்த 2 மணி நேரத்தில் எல்லோருக்கும் ஃபோன் பண்ணினேன்.

அம்மா சொல்லுவாங்க எதுவுமே ஈசியா கிடைத்தால்... மறந்து போகும் என்று... இப்ப மறப்பேன்?...

ப்ளைட்டுக்குள்ள போனா ஒரு இன்ப அதிர்ச்சி... நான் வின்டோ சீட்டு.. ஆசைல் சீட்டில் அழகான பொண்ணு... நம்ம போகிற உள்நாட்டு விமானத்தில் நடு சீட்டில் யாரும் இருக்க மட்டாங்க... ஆஹா மச்சம்டா மருதுன்னு... உன்னாலே.. உன்னாலே.. படம்... தனிசான்னு ஒரே கனவு... நெனைத்து கூட முடிக்கல... வந்தான் ஒரு வில்லன்... 40 வயசு இருக்கும்... இங்கும் ஆப்பு..... ஒரே ஆப்பு.... ஆப்பு மேல ஆப்பு... அவருக்கு பெல்ட் போட சொல்லிக்குடுத்து... அவரு சும்மா விஸ்கியா உள்ள தள்ளுராரு... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... அவருக்கு சர்வீஸ் லைட்டு எப்படி போடறதுன்னு சொல்லி குடுக்க நம்ம ஃபிகரு நம்மள சொன்னது... ஹி.. ஹி...ஹி... " நானும் அதையே தேடுவதாக வழிந்து உட்கார்ந்திருந்தேன்..."... நம்ம ஃபிகரு.. சொல்லி குடுக்க.. உடனே லைட்ட அமுக்கி தண்ணி கேட்க... அந்த பொண்ணு நம்மள ஒரு மாதிரி பார்த்தது... அதுக்கெல்லாம் நம்ம எப்ப கவலைப்பட்டோம்... தூசி தட்டிட்டு வந்து சிங்கப்பூர் வந்தாச்சு...




ஏற்கனவே சிங்கப்பூர் பற்றி நண்பர்கள் சொல்லி உள்ளதால், ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. மெளலி ஏற்கனவே சொல்லிய மாதிரி டாலரை மாற்றி விட்டு.. சிங்கப்பூர் ஏர்போர்ட்டை சுற்றி பார்த்தேன். என்னுடைய நண்பி விந்தியா கல்யாணம் பண்ணி அங்கு இருப்பதால்... அவளிடம் ஓரு 1 மணி நேரம் பேசி விட்டு..(லோகல் கால் ஓசி..ஹி..ஹி).... என்னுடைய ட்ரான்சிட் கேட்டுக்கு வந்து செக்-இன் பண்ணினால்.. அங்கு ஒரு ஃபார்ம் கொடுத்து... அதை நிரப்பி இந்தோனேசியாவில் கொடுக்க சொல்லி... ஃபிளைட்டில் ஏற்றினார்கள். இருந்த அலுப்பில் தூங்கி விட்டேன்... எழுந்து பார்த்தால் மேலிருந்து பார்த்தால் இந்தோனேசியா அழகாக இருந்தது... ஒரே பச்சையாக இருந்தது... வந்து இறங்கி கஸ்டம்ஸ் முடித்து வெளியே வந்தால் (Welcom Mr. Maruthiah) அப்படின்னு இருந்தது... அப்பாடின்னு ஒரு பெரு மூச்சு... நஸ்லம் வந்து என்னை ஹோட்டலுக்கு கூப்பிட வந்திருந்தான்.


இந்தோனேசியா என்னுடைய அனைத்து எதிர்மறையான எதிர்பார்ப்புகளையும் தவுடு பொடி ஆக்கியது. அருமையான ரோடுகள், பசுமையான நிலபரப்புகள்..

நான் நினைத்தது


நான் பார்த்தது

இந்தோனேசியா தலைநகரம் ஜாகார்த்தா, பழமையும் புதுமையும் பின்னி இருக்கும் நகரம். நீங்கள் மேலே பார்த்த ரெண்டும் உண்டு. பணக்காரர்களும் ஏழைகளும் வசிக்கும் நகரம். ரோடுகளில் அனைத்து விதமான கார்களையும் பார்க்கலாம்.. முக்கியமாக டயட்டோ அனைத்து இடங்களிலும்.. டாக்சி அனைத்தும்... அது போல் மேலே பார்க்கும் ஆட்டோ(Bhajai)... என்னை கவர்ந்தது ஜகார்தாட்ரான்ஸ் (JakartaTrans) என்னும் அதிவேக குளிரூட்டப்பட்ட பேருந்து சேவை. இதற்கு என்று தனி லேன்.. மேலே உள்ள 2வது புகைபடத்தில் டிவைடரை ஒட்டி உள்ளது இதற்கானது.







எல்லோரும் கேட்கும் 2வது கேள்வி எங்க ஊர் பெண்கள் எப்படி? (இந்தோனேசியா எப்படி முதல் கேள்வி..) எங்கும் பெண்கள்... அழகாக படைத்திருக்கிறான்.... விபச்சாரம் இங்கு அதிகம் போல... மெளலிய யாரோ கூப்பிட்டத சொன்னார்... நம்மள யாருமே..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... இங்குமா... நம்மள பாத்தா Terror-a தெரியிரோமோ... உங்களால் இதை இஸ்லாமிய நாடு என்றே சொல்லமுடியாது... அனைவரும் மேற்க்கத்திய உடையில் தான் இருக்கிறார்கள்.
வருவதற்கு முன்பு பயப்பட்ட ஒரே விசயம் உண்வு... நல்லவேளையாக நம்மூர் கோமலாஸ் இருந்ததால் தப்பித்தேன். இங்கு அனைத்திலும் மாடு, மீன், பன்றி இறைச்சி... சிப்ஸ் கூட நான் -வெஜ்... ஒரு காலத்தில் இதை பற்றி கவலை பட்டதில்லை... நேற்று சாப்பிங் போகும் போது தான் தெரிந்தது.. நான் எப்படி ஃபுட் கான்சியஸ் ஆகி விட்டேன் என்று.. பாவம் மெளலி தான் என்னால கஷ்டப்படுகிறார்.

என்னுடைய பிறந்தநாள் இன்று

இந்த பிறந்தநாள் போல வேற பிறந்தநாள் எதுவும் நாபகம் இருக்குமா என்று தெரியவில்லை.. எனக்கு இதுவரை யாரும் கேக் வெட்டியதில்லை... மெளலி அதிர்ச்சி சந்தோசம் குடுத்துவிட்டார்... அவருக்கு எப்படி கைமாறு செய்ய?..






உண்மையிலேயே கடந்த 4 மாதங்கள் என்னுடைய வாழ்வில் அழகான நாட்கள்... நன்றி...

இந்தோனேசியா பற்றி விரிவாக அடுத்து வரும்........

Thursday, April 19, 2007

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

இங்கு ஆணி நிரம்ப புடுங்க வேண்டியுள்ளதால் BLOG-ஐ Update பண்ண முடியவில்லை. இப்போதைக்கு முகவரி மட்டும்

தொலைபேசி எண் : + 00 62 81 310 272 77 (மெளலி)

முகவரி :

Hotel Ibis Tamarin, Room No : 317
Jl. KH Wahid Hasyim 77 Jakarta Pusat - 10340
JAKARTA - INDONESIA

Tel : (+62)21/3912323

Tuesday, April 17, 2007

Reporting from Singapore

I have just reached Singapore airport around one hour back. I am posting this from Free Internet zone. The flights was great.

More will come

Keep watch this space.

Sunday, April 15, 2007

தமிழில் வருகிறேன்

கறை இருக்கும் நிலவினை சலவை செய்....
சிறை இருக்கும் மனங்களை பறவை செய்....
எந்த மலர்களும் கண்ணீர் சிந்தி கண்டதில்லையே

ஜுன் போனால்........ ஜுலை காற்றே.......

நன்றி : தேன்கூடு மற்றும் கில்லி

Friday, April 13, 2007

Traveling to Indonesia

Hi Friends,

Tomorrow (14th April) i am traveling to Indonesia. I am traveling out of India for the first time . I am excited though. I am like child now, just like when i first traveled out of Chennai around 4 years back to Delhi. I am traveling with my teammate Mouli. He is making my job easy as he is taking care all of my office work related to travel.

we will try to update this blog regularly if possible .

Watch this space for more.......