Friday, November 30, 2007

கிறுக்கல்கள்

தமிழில் பேசும் தமிழ்க்குல விளக்கு
வேற்று மொழியில் அர்ச்சனை எதற்கு!!!!

நம்ம பில்லாவோட பாட்ட கேட்டவுடன் மனதில் பதிந்த வரிகள்... நம்ம தலைவர் படத்தில கூட தமிழ் கல்யாணம் நடக்கும். எனக்கு கூட ஆசை தான், வீட்டுல நம்மள லூசோன்னு நெனைசிருவாங்க.... உண்மையுலே நம்ம இதுவரைக்கும் நடந்த தப்ப திருத்துகிறோமா..... இல்ல தேவை இல்லாம பயப்பிடறோமா...

அப்புறம் 'கற்றது தமிழ்' கூட அதைத்தான் சொல்லுது. அருமையான படம். படத்தில் சொன்ன அனைத்தும் மண்டையில் சுத்தியல் கொண்டு அடிப்பது போல இருக்கு. இந்தியா நிரம்ப முன்னேறி வருவதாக ஒரு மாயை உலகில் நம்ம இருக்கோம். இன்னும் என் கூட படிச்ச கோபால் மாதம் ௫5000 கு தானே வேலை பாக்குறான். என் கூட படிச்ச 60 பேருல 2 பேருதானே I.T ல வேலை பாக்கிறோம். அப்படின்னா எங்க கிராமமே முன்னேறிருச்சா?. ஆனா படிக்க வைக்க செலவு 10 மடங்கு ஆயிருச்சு. ஏற்ற தாழ்வு அதிகம் ஆக ஆக குற்றங்கள் அதிகம் ஆகும். சென்னையில் அதிக ஏற்ற தாழ்வு இல்லாமல் இருந்தது, இப்ப அதுக்கும் ஆப்பு வச்சாச்சு. குற்றங்கள் அதிகரிக்குமா? காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

அமெரிக்காவில் குற்றங்கள் அதிகம். எனக்கு தெரிஞ்சு பிச்சைக்காரனுக்கு பயப்படும் நாடு இதுவாகத்தான் இருக்கும். இப்படி தான் நானும் என்னோட ரூம்-மேட்டும் கடைக்கு போன, ஒரு பிச்சைக்காரன் வந்து ஒரு டாலர் கேட்டான். நம்ம ரூம்-மேட் வந்து தருவதாக சொல்லிட்டு போயிட்டு கடைக்குள்ள இருந்து வெளியே வர பயப்படுகிறார். சுட்டு போடுவனோன்னு பயந்தான். தினமும் ஒரு பெண் தீயிட்டு எரிக்க படுகிறாள் குப்பை தொட்டியிலே. 3 நாட்களுக்கு முன்பு சின்ன பசங்க சேர்ந்து 1 டாலருக்காக செனகல் டாக்டர சுட்டு கொன்று விட்டார்கள்.

இந்த அமெரிக்காவிலும் எல்லா பிரச்சனைகளும் உண்டு. ஆனாலும் நம்ம ஆளுங்க அடங்காம அமெரிக்கா அமெரிக்கான்னு அலையுரானுங்க. ஒரு மோசமான இளைய தலைமுறை அமெரிக்காவில் வளர்ந்து கொண்டிருக்கிறது. என்னுடைய பிள்ளை கண்டிப்பாக இங்கு வாழற என்னுடைய மனம் விரும்பவில்லை.

தங்கைக்கு கல்யாணம் இந்த டிசம்பர் 13 ஆம் தேதி. சந்தோசமாக இருக்கிறது. எனக்கு பிடித்த தமிழ் M.A படித்த வாத்தியார் தான் மாப்பிள்ளை.

அடுத்து நம்மளுக்கு emergency போட்டுருவாங்க. என்னது பாகிஸ்தான் போறேன்னு கேட்கிறீங்கள!!! அது நம்ம மௌலி மட்டும் தான் போவாரு. :-)

Thursday, November 29, 2007

தமிழ் மொழி மாற்றி

ரெம்ப நாளா தமிழ் மொழி மாற்றி (translater) தேடினா நம்ம கூகிள் இந்தியா சோதனை கூடம் புது மொழி மாற்றியுடன் (Transliteration) வந்திருக்கு.... try பண்ணி பாருங்க....