Thursday, March 27, 2008

Monday, March 24, 2008

ஏய் நானும் ரவுடி தான்

இந்த பதிவு பொங்கலுக்கு போட வேண்டியது.. நான் பயங்கர சோம்பேறி ஆயிட்டேன்... என்ன பண்ணுவது.. ஆளாளுக்கு ரூம் போட்டு அடிக்கிறாங்க... ம்ம்ம்.. அத விடுங்க...

அந்த காலத்துல... 1947 ல... ச்சே... அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல... பயந்துராதீங்க.... பொங்கல் அப்படின்னா எங்க ஊரில் போட்டியெல்லாம் நடத்துவாங்க... நம்ம வழக்கம் போல அதுக்கெல்லாம் கலந்து கொள்ளுவது இல்ல... ஒரு கரும்பா தின்னுட்டு... போயி வேடிக்கை மட்டும் பாக்குறது... இல்ல ஊரில் உள்ள டூரிங் டாக்கீஸ் போயி மாலை நேர படம் பாத்துட்டு... ஒரு முறுக்கு சாப்பிட்டு.. பொங்கல முடிச்சிருவேன்...

நான் கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் போது முதன் முறையாக தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது... வந்தது எல்லா வினையும்... தாய் பிள்ளையா பழகுன எல்லோரும் எதிரி ஆயிட்டாங்க... எல்லாம் இந்த பணம், ஆட்சி, அதிகாரம் பண்ணுற வேலை... அப்ப கொஞ்சம் நம்மளுக்கு தெனாவட்டு அதிகம்.. என்னடா நம்மள யாரும் கெட்ட பய்யன்னு சொல்ல மட்டேன்கிறானுக.. அப்படின்னு ஒரு எண்ணம்... கெட்ட பேரு வாங்கனும்னு பயங்கர துடிப்பு ...

அப்படித்தான் போயி கபடி பார்க்க போயிருந்தேன்... அப்ப பார்த்து யாரோ நம்ம சாதிக்காரனை அடிக்கறதா சொல்ல.. அஹா இது தாண்டா வாய்ப்புன்னு போனா... அது அவனுங்க குடும்ப சண்டை.... சரின்னு கிளம்பினால்... அதுல ஒருத்தன்... எங்க ஜாதிய பத்தி சொல்ல.. ஒரு U-Turn போடுறதுக்குள்ள.... எல்லோரும் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.... டேய் ... விடுங்க... நானும் அடிக்கலாம்னு பார்த்தா... பெரிய கும்பல் சேர்ந்துருசு... தனியா ஒருத்தன மாட்டினான்.. ஒரு கட்டைய எடுத்து ஒங்கினேன்... பின்னாடி இருந்து ஒரு கை.. என்ன பிடிச்சு இழுத்து போகுது... வேற யாரு எங்க அம்மா தான்... எல்லோரும் என்னையே பாக்குறாங்க... கையில பெரிய கட்டை..

மாலையில சட்டி போலீஸ் வந்து ஊரே ஒரு ரனகலமா ஆயிருச்சு... எல்லோரும் எங்க வீட்டுக்கு வந்து... என்னை வேற ஊருக்கு போக சொன்னாங்க... எல்லோரும் நான் அடிக்கறதா பாத்திட்டங்க... இல்ல இல்ல... அடிக்க போனத... என்ன பண்ணுறது... அடிக்க போனதுக்கு என்னை மூன்று நாட்களுக்கு ஊர் கடத்திட்டாங்க... ஹ்ம்ம் நம்ம ரவுடி கதை அதோட முடிஞ்சது....

Saturday, March 22, 2008

கவிதை கவிதை

உன்னோடு பேசிய
ஒவ்வொரு மணித்துளியும்

மரணப் படுக்கையுலும்
மறவாது கண்மணியே