Monday, January 14, 2008

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் - 1



இந்த வருட பொங்கல் என்னோட தங்கைக்கு தலை பொங்கல், அதனால ரொம்ப முக்கியமான பொங்கல். அதுக்கப்புறம் எனக்கு இது தான் கடைசி பிரமச்சாரி பொங்கலா இருக்கும்னு நெனைக்கிறேன்.... ஏய்.. யாருச்சலும் பொண்ணு குடுங்கப்பா... இல்லாட்டி இந்த பதிவ அடுத்து வருசமும் போட வேண்டியிருக்கும். ஹ்ம்ம் நம்ம பிரச்சனை எனக்கு.....
வர வர பொங்கல் அவ்வளவு சிறப்பா இருக்கிறது இல்ல.. தீபாவளிக்கு இருக்கிற ஆர்பாட்டமோ... இல்ல உற்சாகமோ பொங்கலுக்கு இருப்பதில்லை...
முன்ன எல்லாம் நல்ல மகசூல் வரும்.. எனக்கு தெரிஞ்சு எங்க ஏரியல எங்கு பார்த்தாலும் பருத்தி நல்ல வரும்.. ஒரு கையளவு பருத்தி குடுத்தால் ஐம்பது கிராம் பொரிகடலை குடுப்பாங்க.. அவ்ளோ தேவை இருந்தது.. ஆனால் இன்னைக்கு ஒரு கைல குடுத்தால் சுருட்டுற தாள் கூட கிடைக்காது... விவசாயிக்கு கிடைக்க கூடிய விலை கிடைப்பது இல்லை.. அப்புறம் மழை ஒழுங்காக பெய்வதில்லை... மாற்று பயிர் சொல்ல ஆளில்லை.. விவசாயத்துறை படித்த யாரும் கிராமத்துக்கு வந்து சொன்னதை நான் பார்த்து இல்லை... அவங்கள பத்தி குறை சொல்லுவது தப்பு.. பத்து, பதினைந்து லட்சம் ரூபாய்னு மக்கள் பணத்துல படிச்ச டாக்டர் வர்றது இல்ல... ரெண்டு மூணு லட்சத்துல படிச்ச இன்ஜினியரிங் யாரும் கிராமத்துல வந்து ரோடு போடுறது இல்ல... மருத்துவமனை கெட்டுறது இல்ல... அவனவன் முப்பதாயிரம், நாப்பதியிரம் வாங்கும் போது இவன் மட்டும் இங்க இருந்து என்ன பண்ண... அப்புறம் விலைவாசி உயர்வு.. விவசாயி மகசூல் பண்ணி விக்கிற எதுவும் விலை ஏறுவது இல்லை.. ஆனால் இவன் அதையே திருப்பி வாங்கும் போது விலை அதிகம்... உளுந்து கொள்முதல் விலை கடந்த பத்து வருடத்தில் இரண்டு மடங்கு தான் அதிகரித்து உள்ளது... ஆனால் உதயம் உளுந்து பல மடங்கு அதிகரித்து விட்டது.... இதெல்லாம் இடைத்தரகர்களும், பண முதலைகளும் முழுங்கி விட்டன... வேலைக்கு ஆள் ஒன்றுக்கு பதினைந்து ரூபாயில் இருந்து இப்போது நூறு ரூபாய் ஆகி விட்டது.. என்ன அப்படின்னு கேட்டால் பெட்ரோல் விலை எரிவிட்டதாம்.. அப்ப விவசாயிக்கு அந்த பெட்ரோல் குறைச்சலா கிடைக்குதா?.. அவனுடைய கொள்முதல் விலை மட்டும் ஏன் ஏறவில்லை....
மார்கழியில் வரும் அறுவடைக்கும், மகாசூலுக்கும் நன்றி சொல்லத்தான் இந்த பொங்கல் ஆனால் விவசாயி சந்தோசம்-ஆக இல்லை.. அதனால் பொங்கல் அவ்ளோ சிறப்பாக இல்லை.. ஆனால் தீபாவளி எப்படி இல்லை...
படித்த நம்மளே இவ்ளோ பொறுப்பு இல்லாம இருக்கும் போது அடுத்தவன பத்தி ஒண்ணும் சொல்லோரதுக்கு இல்ல... எல்லோரையும் படித்து முடித்து ஒரு வருடம் எதாவது அரசாங்க துறையில் வேலை பார்க்க சொல்லணும்... இது டாக்டருக்கு மட்டும் இல்ல... "எல்லோர்க்கும்" ..... அப்பத்தான் அரசாங்கத்தில் என்ன நடக்குன்னு தெரியும்... அதுவரை ரவுடி அரசியல்வாதியாய் வருவதை இந்த நாட்டில் தடுக்க முடியாது... போயி ஒங்க ஊர்ல ரோடு போடு... எதாவது செய்... அப்பதான்... எல்லாவனுக்கும் படிப்பு முடித்தல் சான்றிதழ் தரப்படும்...
டாக்டர மட்டும் போக சொன்ன எப்படி போவான்... எதுக்கு ரோடு வேலை எல்லாம் தனியாருக்கு குடுக்கணும்.... அரசாங்கமே எடுத்து நடத்தி புதுசா வர்ற படித்த மக்களை விட்டு பாரு... அப்பத்தான் படிச்சவன் அரசியலுக்கு வர வாய்ப்பு உண்டு.... மக்களுக்கு நல்லது நடக்க வாய்ப்பு இருக்கு...
ரெம்ப சீரியசா போகுதோ....
இதபத்தி ஒரு frozen பரோட்டா தின்னுக்கிட்டே யோசிச்சு பார்த்தேன்... ஒன்னுமே வரல? எப்படி வரும் நம்ம தான் அடுத்தவன் கேட்பானோ அப்பிடின்னுட்ட யோசிச்சா எப்படி வரும்!!! அப்புறம் ஆபீஸ் ல போயி ஆணி புடுங்கும் போது டமால்-னு ஒரு பலப் எரிச்சது... அட அது அந்த மேசிகான் பிகரு பாத்தது அதனால இல்லங்க... நம்மளுக்கு எப்ப எது வரணுமோ... அப்ப வராது...
ரெம்ப சீரியசா ஆயிருச்சு இந்த பதிவு... அடுத்த பதிவு என்னோட மறக்க முடியாத காமெடி பொங்கல் நினைவுகள்....

தொடரும்....

1 comment:

TVK said...

Hi Marudhu,

Good post about village economics.

Enna ungaluku nenavu irukanu theriyala...Nan unga junior in NEC CSE.Udhayan friend...Nalatinputhur la veedu kooda eduthu irunthomey....

Enakum Mukkutumalai(near ilayarasanenthal) than sontha ooru...neenga sonna neraya visayam apdiye unmai....

Also try and visit our blog
www.aliensofnec.wordpress.com