Saturday, June 14, 2008

தசாவதாரம் - ஒரு பார்வை

முதல் முறையாக ஒரு விமர்சனம் எழுதினால் என்ன அப்படின்னு தோணி... எழுதுறேன்.. நல்ல எல்லாம் தெரிஞ்சவங்க தான் விமர்சனம் எழுத முடியும்... அதனால இது ஒரு பார்வை தான்.. நல்ல பார்வையா? இல்ல நொள்ள பார்வையன்னு நீங்க தான் பார்த்து சொல்லணும்...

கமலுடைய உழைப்பு நிறையவே தெரிகிறது படத்தில். எல்லாமே கமல் தான் போல... ஒரு கடினமான கதையை சாதரண மக்களுக்கு புரிகின்ற மாதிரி எடுத்ததுக்கு பாராட்ட வேண்டும். அப்புறம் அவரோட பத்து வேடங்களும் அருமை. ஆனால் அது தான் பிரச்சனையே. எல்லாம் முக முடி போட்டு விட்டு வந்த மாதிரி இருக்கு. கதைக்கு கொஞ்சம் பத்து வேடம் அதிகம் தான். It is distracting from the main story.

கமல் சார் உங்களுக்கு பிரமாண்டம் வேண்டாம்.. உங்களோட நடிப்பு திறமை போதும்... அது பிரமாண்டத்துக்கு பிரமாண்டம்...

தசாவதாரம் இன்னும் ஒரு ஆளவந்தான்.. முக மூடி கொள்ளைக்காரன்.

2 comments:

Anonymous said...

Hello
Vasanam Crazy Mohal illa..Kamal..so Theriyama review ezhuthanthinga

Maruthiah V said...

thanks pa.. corrected