Monday, December 31, 2007

திரும்பி பார்க்கிறான் 2007

நாம என்ன பெரிய கம்பெனி முதலாளியா? வருஷம் முடிச்சா கணக்கு சொல்ல. இந்த புது வருட கொள்கை, பிடிப்பு அது எல்லாம் நம்மளுக்கு கிடையாது இது வரைக்கும். நம்ம கொள்கை ஒன்னு தான் - "கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே". அப்படி இல்லன்னா இப்ப என்னோட கம்பெனில வேலை பார்ப்பானா!!!!!!எல்லா அப்ரேசிலும் ஆப்ப வச்சாலும் இன்னும் இருக்கோம்ல!!!!.. தூணுப்பா தூணு..

இந்த வருஷம் ரெம்ப நல்ல தான் இருந்துஞ்சுப்பா.. முதன் முதலாக நாட்டை விட்டு போனேன்... அப்புறம் கண்டம் விட்டு கண்டம் போயி... வலப்பக்கம் இடப்பக்கம் ஆனது.. முதல் மாடி மாறி இரண்டாம் மாடி ஆகியது. தண்ணி போயி தாள் வந்தது.. என்னது எதுக்கா... அதெல்லாம் சொம்மா சொல்லிட்டு இருக்க முடியாது.. உக்காந்து யோசிபாங்களோ இந்த ஊர்ல அப்படின்னு தோணுச்சு.. இப்படித்தான் ஆபீஸ்ல வலப்பக்கம் நடந்து எல்லோரும் நம்ம கிட்ட Excuse me கேட்க நானும் பெருந்தன்மையா மன்னித்து விட்டான்.. அப்புறம் தான் தெரிஞ்சது நான் தப்பா வந்தது..!!!! இந்த அவமானம் எல்லாம் நம்மளுக்கு புதுசா?.. ஆனாலும் இன்னும் சொறுல இருந்து burger/pizza -க்கு மாறல.. அதே சோறு தான்..

மிகவும் சந்தோஷமான விசயம் என்னோட தங்கையின் திருமணம். மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. எனக்கு சில அனுபவங்களையும், வாழ்க்கையின் மறுபக்கத்தையும் காட்டியது.

மறக்க முடியாத சில எண்ணங்களை/நிகழ்வுகளை/அனுபவங்களை இந்த வருடம் விட்டு சென்றுள்ளது.

அடுத்த வருட கதவுகளை இதோ திறந்து புதிய எண்ணங்களை / நிகழ்வுகளை / அனுபவங்களை வரவேற்க தயாராக இருக்கிறேன்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே...

No comments: