எனக்கெல்லாம் இது வரைக்கும் என்னுடைய படிப்பிற்கு மற்றும் வேலை விசயமாக உதவிய, வழிகாட்டிய சொந்தங்கள் மட்டும் தான் மிகவும் நெருங்கி பழகியது உண்டு. எனக்கும் மற்ற சொந்தங்களுக்கும் அவ்வளவு நெருக்கம் கிடையாது. அடுத்து வழக்கம் போலே என்னுடைய நண்பர்களிடம் நான் நெருக்கமாக இருப்பேன். ஆனால் என்னுடைய தங்கை திருமணத்திற்கு மற்றும் பிற சொந்தங்கள் காட்டிய ஈடுபாடு என்னை நெகிழ வைத்தது. எதோ அவர்கள் வீட்டு திருமணம் போல இருந்தது.
திருமணம் முடிந்தவுடன் என்னுடைய பாரம் குறைந்தது, மனம் நெகிழ்ந்தது என் சொந்தங்களால். என்னால் எப்படி அவர்களுக்கு நன்றி செலுத்த முடியும் என்று தெரியவில்லை. கால் மனிதனாக இருந்த நான் அரை மனிதனாக மாறியது போன்ற உணர்வு. என்னுடைய மீதி பாதி உலகத்தை எனக்கு காட்டியது இந்த திருமணம்.
மீண்டும் அவர்களை சந்திக்க தயாராகிக் கொண்டு இருக்கிறேன்.
Wednesday, December 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment