Monday, April 14, 2008

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

என்னதான் அரசு இனிமே தமிழ் புத்தாண்டு தை மாசம்னு சொன்னாலும்... நம்மளுக்கு எல்லாம் எப்பவுமே சித்திரை மாசம் தான் புத்தாண்டு... யாரே கேட்டு இப்படி எல்லாம் பண்ணுறாங்கன்னு தெரியல... ஊர்ல பல பிரச்சனை இருக்கும் போது இவங்களுக்கு இதுக்கும் மட்டும் எப்படித்தான் நேரம் கிடைக்குதோ... இது மக்களுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளியை காட்டுகிறது...

வழக்கம் போல இன்று எல்லா கோவிலும் நிரம்பி வழிந்திருக்கும்... நானும் போனேன்... சரி இன்னும் எவ்ளோ நாள் இந்த சிகாகோ ல இருப்பன்னு தெரியாது... போயி அரோரா பாலாஜி கோவிலுக்கு போயி நல்ல பொண்ணா பாத்து கொடு.. அப்படின்னு வேண்டிட்டு... போயி நல்ல சாப்பாடு சாப்பிட்டு வரலாம்னு நெனைச்சு போனேன்...

போனால் இன்னைக்கு எதோ முருகன் கல்யாணம் நடந்துட்டு இருத்துச்சு.... அப்படியே பக்தி பரவசதுல... பாத்திட்டு இருந்தேன்... சத்தியமா... நம்புங்க... அப்போது பாத்து பக்கத்துல இருந்தவரு... என்ன விசேசம் அப்படின்னு கேட்டாரு... நான் ஒரு முழி முழிச்சிட்டு... எதாவது முருகன் திருக்கல்யாணம் இருக்கும்... அப்படி இல்லன்னா... தைப்புசமா இருக்கும் அப்படின்னு உளறி விட்டான்... அந்தாளு நம்மள ஒரு மொற விட்டாரு... அஹா மாட்டிக்கிட்ட மருதுன்னு.... எஸ்கேப் அயிட்டனே...

நீங்களே சொல்லுங்க... புது வருஷம் தை மாதம் வரும் பொழுது... தை புசம் சித்திரைல வரக்கொடதா?...

நம்மள யாராலும் ஏமாத்த முடியாது!!!!! ஆமா!!!!!

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே!!!!

Video Testing Enjoy

3 comments:

Tisai said...

தைபூசம் சித்திரை-ல்?
- நல்ல குசும்பு நண்பா!

Maruthiah V said...

he he... enna pannurathu... brain overtime work pannuthu!!!!

Ganesh Kumar said...

thambi, karunanidhi intha blog padicharna unnai pathi romba perumaiya murasolila ezhuthuvaru..