Tuesday, April 29, 2008

ஆறுதல் - Positive Look

இப்ப இது அ(ஆ)ப்புரசில் நேரம்.. இப்படி தான் தலைப்பு போட வேண்டி இருக்குது.. என்ன பண்ணுறது... என்னோட எல்லா பதிவையும் படிக்கும் போது.. தெரியும்.. நான் எவ்ளோ பொறுமைசாலின்னு... இப்படி தான் இந்த வருசமும்... அ(ஆ)ப்புரசில் பக்கத்த ஓப்பன் பண்ணி வச்சு... அய்யோடா என்ன பண்ணுறது.. என்ன போட்டாலும் ஒண்ணும் ஒப்பேர போறதில்ல.. அப்படின்னு... வழக்கம் போல எதாவது திட்டி எழுதலாம்னு கன்னத்துல கைய்ய வச்சுட்டு உட்காருந்தேன்... அப்ப பாத்து என்னோட கூட வேலை பாக்குறவன் வந்து... மருது... என்னதான் ஒண்ணுமே சரி இல்லன்னாலும்... எவ்ளோ கஷ்டத்துலயும்.. positive look இருக்கதுறது தான் நல்லது... அப்படின்னு சொல்லிட்டு போயிட்டான்... அதுக்கு அப்புறம் உட்காந்து யோசிச்ச.. அஹா இப்படி வேற இருக்கா... அப்படின்னு அ(ஆ)ப்புரசில் முடிசிட்டேன்... பொதுவா அ(ஆ)ப்புரசில் முடிச்ச உடனே நம்ம மேனேஜர்-ஏ பாத்து கோபம் வரும்... முதல் முறைய எனக்கு ஒரு confidence வந்துச்சு.....

இத மாதிரி தான்... பன்னிரண்டாவது வகுப்பு படிக்கும் போது.. எனக்கு கொஞ்சம் கணக்கு நல்ல வரும்... ஹலோ அந்த கணக்கு இல்ல.... நான் சொல்லுறது கணக்கு பாடம்.... அத நம்பி தான் என்னோட பொறியியல் கல்லூரி கனவே இருந்துச்சு... நான் chemistry ல கொஞ்சம் வீக்... ஆமா ரெண்டு chemistry யும் தான்... முதல் நாள் chemistry க்கு நைட் பகல்னு பாரமா படிச்சுட்டு.... (எவ்ளோ தான் படிச்சாலும் அது ஊத்திருச்சு).. மறுநாள் கணக்கு பரிட்சை... மறுநாள் பன்னிரண்டு மணிக்கே தூக்கம் வந்துருச்சு... இன்னும் ஒரு மூணு chapter நான் ரிவைஸ் பண்ணவே இல்ல.... சரி காலையில எழுந்து படிக்கலாம் னு.. அம்மாவ என்னை ஐந்து மணிக்கு எழுப்ப சொன்னேன்... அம்மா என்னை எழுப்புனது ஏழு மணிக்கு.... ஒரே அடம்... அழுகை.. என்னோட கனவு எல்லாம் போச்சுன்னு... நான் இன்னிமே ஒண்ணும் பண்ண முடியாதுன்னு... அப்ப எங்க அம்மா... "ஒண்ணும் கவலை படாத ராசா... நான் தப்பு பண்ணிட்டேன்... நீ மார்க் கம்மி எடுத்தாலும்... பரவ இல்ல.. நான் உன்னை காசு குடுத்து படிக்க போடுறன்..." அப்படின்னு அனுப்பி வச்சாங்க... ஒரே முகம் வீங்கி பரிட்சை எழுத போனேன்... போன... அங்க ஒரே தெரிஞ்ச கணக்கா வந்து அதுல நூறு சதவீத மார்க் எடுதுட்டன்... எனக்கும் அப்ப தெரியும் எங்க வீட்டுல என்னை காசு குடுத்து படிக்க போட முடியாதுன்னு... ஆனாலும் அந்த பொய்யே நம்பி... அந்த ஆறுதல் வார்த்தை என்னோட வாழ்க்கைய மாத்திரிச்சு...

பொய் சில நேரங்களில் அழகு.... வாழ்க்கை திசை மாற்றி...

5 comments:

Pintoo said...

hehee..rombaa thanks :D..adaa neengaa vasikkarengalaaa..

Pintoo said...

romba azhakaa sonnengaa poy azhagunnu :)

Maruthiah V said...

pintoo :

rempa nandri anni... enna pannurathu.. poyyinnu therincha saamalikka vendi irukku...

Anonymous said...

Poi sila nerangalil azhaghu.. Ana appraisal nerangalil aabathu...

Maruthiah V said...

gk :

namma eppavuma unmai thaan pesuvom... ana antha manager pasanga eppavuma poyyi thaan solluvanga...